free website hit counter

இலவச பயணத்தால் பெண்கள் பஸ்களில் செல்வது 61 சதவீதமாக உயர்ந்துள்ளது- அமைச்சர் சிவசங்கர் தகவல்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச பயண திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

தமிழகத்தில் 22 ஆயிரம் அரசு பஸ்கள் உள்ளன. உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் 3 ஆயிரம், 4 ஆயிரம் பஸ்கள் தான் உள்ளன.

சென்னையில் தினமும் அனைத்து பஸ்களும் இயங்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். ஆனால் அதிகமான ஊழியர்கள் விடுப்பு எடுப்பதால் பஸ்களை இயக்க முடியாத சூழல் உள்ளது. தேவையற்ற விடுப்புகளை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும்.

40 சதவீதம் பெண்கள் தான் அரசு பஸ்களில் பயணம் செய்து வந்தனர். பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் பெண்கள் பயணிப்பது அதிகரித்துள்ளது. இப்போது 61 சதவீதம் பெண்கள் பஸ்களில் பயணம் செய்கிறார்கள்.

போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.42,500 கோடி கடன் உள்ளது. மத்திய அரசு டீசல் விலையையும் உயர்த்தி வருகிறது.

பல்வேறு நிர்வாக சிக்கல்களுக்கு இடையே தான் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச பயண திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. நிர்வாக சிக்கல்களை தீர்க்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction