free website hit counter

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா டிரான்ஸ்பர்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடப் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்குத் தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

அப்போது, நீலகிரியில் யானைகள் வழித்தடத்திலுள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்டுகளை உடனடியாக அகற்றவும், மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

2017 ஆம் ஆண்டில் இருந்து நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யும் சூழல் நிலவிய போது, அவரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்று, இந்த வழக்கில் முறையிடப்பட்டதை அடுத்து, இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்தது.

இதையடுத்து, நிர்வாக ரீதியில் அவசர மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction