free website hit counter

ஒடிசா ரெயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு - ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஒடிசா ரெயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாலசோரில் விபத்து நடந்த பகுதியில் நடந்து வரும் மீட்பு பணிகளை 2-வது நாளாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:- "கோரமண்டல் ரெயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றப்பட்டுள்ளது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடத்த இடத்தில் வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரெயில் சேவையை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளோம்.

ஒடிசா ரெயில் விபத்துக்கான விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை வரட்டும் ஆனால் சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த சம்பவம் நடந்தது என்று கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction