free website hit counter

ரூ.16 கோடி மதிப்பிலான அரசு நிலம் கோவை மாநகராட்சியில் மீட்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அங்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தை மீட்டனர்.
கோவை மாநகராட்சியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள், பூங்காக்கள் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 22 வார்டு ராமகிருஷ்ணா லே-அவுட் பகுதியில் சுமார் 40 சென்ட் இடம் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. இந்த இடம் மாநகராட்சியின் பூங்காக்கு சொந்தமான இடமாகும். இதனை அடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துராமலிங்கம் தலைமையில், உதவி நகரமைப்பு அலுவலர் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அங்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தை மீட்டனர். இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.16 கோடி ஆகும். அந்த இடத்தில் உள்ள கட்டிடம் இடித்து பூங்கா பணிகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது. இதே போல அனைத்து ஆக்கிரமிப்பு பூங்காக்களையும் மீட்டெடுப்போம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction