‘மாஸ்டர்’ படத்தின் கொண்டாட்டத்தையே தளபதி விஜய்யின் ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
இந் நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் டிவி தயாரிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 65-வது படத்தின் முதல் தோற்றத்தை, நாளை விஜய்யின் 47-வது பிறந்தநாளான நாளைய தினத்தை முன்னிட்டு ஜூன் 21 மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.
இந்த முதல் தோற்றத்தில் விஜய் கையில் துப்பாக்கி ஒன்றை கையில் ஏந்தியுள்ளார். படத்துக்கு மிருகம் என்று பொருள் கொண்ட ‘பீஸ்ட்’என்று ஆங்கிலத்தில் பெயரிட்டுள்ளனர்.
இப்படி ஒரு தலைப்பு உண்மையிலேயே தளபதி ரசிகர்களை வெறி கொள்ள வைத்திருக்கும். இனி அடுத்து வரும் 2 நாட்கள் அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க யோகிபாபு, விடிவி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகள் அமைக்க..மனோஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
Comments powered by CComment