free website hit counter

ஜெர்மனியில் கோவிட் நான்காவது அலை தொடங்கிவிட்டது : சுகாதார நிபுணர்கள்

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜெர்மனியில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றுகள், 'நான்காவது அலை' ஆரம்பமாகிவிட்டதைக் காட்டுகின்றன. இதே வேகத்தில் தொற்றுக்கள் தொடருமானால் மேலும் நிலைமை மோசமாகிவிடும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"உண்மையான நான்காவது அலை இப்போது தொடங்கியுள்ளது மற்றும் தொடர்ந்து வேகத்தை எடுக்கிறது" என்று DIVI இயக்குனர் கிறிஸ்டியன் கராகியானிடிஸ், தனது ட்விட்டரில் எழுதினார். கடந்த மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக தொடர்ந்து ஒன்பதாவது நாளாக, ஜெர்மனியில் 7 நாள் தொற்றுவீதம் அதிகரித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பதிவுகள், ஏழு நாட்களுக்குள் 100,000 பேருக்கு 95.1 கோவிட்-19 தொற்றுகள் அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. கடந்த மே மாதத்தின் நடுப்பகுதிக்கு பிறகு இந் நிகழ்வு 90க்கு மேல் அதிகரிப்பது இதுவே முதல் முறை. முன்னதாக ஒரு வாரத்திற்கு முன், 7-நாள் நிகழ்வு 68.7 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாளில் 19,572 புதிய கோவிட் நோய்த்தொற்றுகளையும், 116 கோவிட் தொடர்பான இறப்புகளையும் பதிவு செய்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. "இந்த அதிகரிப்பின் போக்கு, இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலங்களில் தொற்றுக்களின் எண்ணிக்கை மேலும் துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் "எதிர்பார்க்கக்கூடிய கடினமான இலையுதிர் மற்றும் குளிர்கால அலையுடன், இன்ஃப்ளூயன்ஸா போன்ற பிற சுவாச நோய்த்தொற்றுகள் உள்ள நோயாளிகளும் ஜெர்மனியில் தீவிர சிகிச்சை பிரிவுகளை மீண்டும் அதன் வரம்புகளுக்கு அப்பால் கொண்டு வர முடியும்" என்று ஹாம்பர்க்-எப்பென்டார்ஃப் பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மருத்துவப் பிரிவின் மருத்துவர் ஸ்டீபன் க்ளூக் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction