சுவிற்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள கோவிட் பெருந்தொற்று பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து பல மாநிலங்கள் விரைவாக வெளியேற விரும்புகின்றன.
பெப்ரவரி 17 அன்று கோவிட் எதிர்ப்பு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் மத்திய அரசு இரண்டு வழிமுறைகளை கலந்தாலோசிக்க மாநில அரசுகளைப் பரிந்துரைத்தது. முதலாவது அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வது. இதன்படி சான்றிதழ் கடமை, தனிப்பட்ட கூட்டங்களுக்கான வரம்புகள் மற்றும் பெரிய நிகழ்வுகளுக்கான அங்கீகாரங்கள்; போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் பொது இடங்களில் இருந்து முகமூடியை கூட விலக்கல் என்பன உள்ளடங்கும். இரண்டாவது, மிகவும் விவேகமான, முக்கிய தேவைநிலைகளில் வேகத்தை குறைத்து, தளர்வுகளை ஏற்படுத்துவது.
இதற்கான கலந்தாய்வு நாளை முடிவடையும் நிலையில், Zug, Schwyz, Uri, Obwalden மற்றும் Nidwalden மாநில அரசாங்கங்கள் மீண்டும் திறப்பதற்கான நேரடி வழியைத் தேர்வுசெய்ய விரும்பியுள்ளன. கட்டுப்பாடுகள் மற்றும் சான்றிதழ் தேவை என்பன, வைரஸைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யவில்லை. அதலால் விரைவாக ரத்து செய்வதற்கு ஆதரவாக இருப்பதாக சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
முகமூடியை அணிய வேண்டிய கடமையுடன் ஒரு விரைவான வெளியேறுதலுக்கான ஆதரவை ப்ரீபேர் மாநிலம் தெரிவித்துள்ளது. Basel-Stadt மற்றும் Jura அவர்கள் இரண்டாவது தெரிவான மிகவும் எச்சரிக்கையுடன் அமைதியான தளர்த்தலை விரும்புவதாகத் தெரியப்படுத்தியுள்ளன. இது தொடர்பிலான இறுதி முடிவை மத்தய கூட்டாட்சி அரசு பெப்ரவரி 16 அன்று முடிவு செய்யும் எனத் தெரிய வருகிறது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    