சுவிற்சர்லாந்தில் எரிபொருட்கள் முதலாக பல்வேறு பாவனைப் பொருட்களின் விலை அதிரடியாக அதிகரித்துள்ள நிலையில், விரைவில் பாற்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் எனத் தெரியவருகிறது.
சுவிஸ் பால் உற்பத்தியாளர்கள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இருந்து ஒரு கிலோ பாலுக்கு மூன்று சதம் அதிகமாக வசூலிப்பார்கள் என்று சுவிஸ் பால் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பால்பொருள் உற்பத்தி மிகுந்த நாடுகளில் ஒன்றான சுவிஸில் அதன் விலையேற்றம் குறித்து ஆச்சரியப்படுகையில், உலகம் முழுவதும் பால் விலை உயர்ந்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்து இதற்கு விதிவிலக்கல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வுக்குக் காரணம் பொதுவாக விவசாயம் மற்றும் குறிப்பாக பால் உற்பத்தியில் ஏற்படும் அதிக செலவு ஆகும்.
பாலின் விலை உயர்வு, யோகர்ட், வெண்ணெய் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் மற்றும் சாக்லேட் போன்ற இனிப்பு வகைகள் பிற உணவுவகைளின் விலைகளும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.