free website hit counter

உக்ரைன் மரியுபோலில் மக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது குண்டுத் தாக்குதல் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோல் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய குண்டுவெடிப்புகள் குறையாத நகரம். இங்கே 500க்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருந்த திரையரங்கரத்தின் மீது நேற்று குண்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

நேற்று உக்ரைன் அதிபர் வோலோடிமி ஜெலென்ஸ்கி அமெரிக்க காங்கிரஸில் உரை நிகழ்த்திய போது, பேர்ல் ஹார்பர் மற்றும் 9/11 தாக்குதல்களை நினைவு கூர்ந்து பேசியிருந்தார். வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் முதன்முறையாக "புடின் ஒரு போர்க்குற்றவாளி" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தியேட்டர் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மனிதாபிமானமற்ற இந்த தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ரஷ்யா இத் தாக்குதலை தாம் மேற் கொள்ளவில்லை என மறுத்துள்ளது. மேலும் "தேசபக்தர்களை துரோகிகளிடமிருந்து வேறுபடுத்துவது எப்படி என்பது ரஷ்ய மக்களுக்குத் தெரியும்." என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டும் இத்தாக்குதல் நடவடிக்கையில், அடைக்கலம் பெற்றிருந்த மக்கள் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இடிபாடுகள் அகற்றபட்டபோது உள்ளிருந்து  இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிடத்தில் குறைந்தது 500 பேர் இருந்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் மக்கள் தொடர்ந்து தேடுகின்றனர். இதனிடையே, இந்த தாக்குதலை ரஷ்யா மறுத்துள்ளது இதில் எத்தனை உயிரிழ்ப்புக்கள் நிகழ்ந்தன என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.

மூன்றாவது வாரத்தில் உக்ரைன் யுத்தம் - 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்யவீரர்கள் பலி !

ரஷ்ய மற்றும் உக்ரேனிய தூதுக்குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் நேற்றைய உரையாடல்கள், "நடுநிலை" மற்றும் "உத்தரவாதம்" என்ற முக்கிய வார்த்தைகளுடன் பொதுவான திசையில், ஒரு பதினைந்து அம்ச அமைதித் திட்டத்தின் வரைவினை அமைக்கும் ஆலோசனை வரை நகர்ந்துள்ளது.

" உக்ரேனில் விழும் ஒவ்வொரு வெடிகுண்டுக்கும், உக்ரைனிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வலுவான சுவர் ஒன்று எழுகிறது என ஜேர்மன் தலைவர்களுடனான வீடியோ தொடர்பில், உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தினார். பெர்லினில் "சுவரை இடிக்க கோர்பச்சேவைக் கேட்ட ரீகனை மேற்கோள் காட்டி, "ஜெர்மனிக்குத் தகுதியான தலைமையைக் காட்டி" இந்தச் சுவரை இடிக்குமாறு ஜெர்மன் அதிபர் ஸ்கோல்ஸைக் கேட்டுக் கொண்டார்.

போரின் முடிவு, பாதுகாப்பு உத்தரவாதங்கள், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னுரிமைகளாகக் கருதும் வகையில், மாஸ்கோவுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் கடினமாக உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார். உக்ரேனிய எதிர்ப்பு மற்றும் மாஸ்கோவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் போன்ற காரணிகள் ரஷ்யர்களை சிறிது நிலைப்பாட்டை மாற்றியிருந்தாலும் கூட, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்குமிடையில் இடைவெளி அதிகமாகவே உள்ளது என உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

"மார்ச் 16 அன்று, ரஷ்ய விமானப்படை, நகரத்தின் எல்லைக்குள் எந்த இலக்கையும் தாக்கவில்லை" என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, இத்தாலியில் உள்ள ரஷ்ய தூதரகம் அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு இடுகையில் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction