free website hit counter

ஆப்கானில் அமெரிக்கா மீண்டும் விமானத் தாக்கு!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதும் வாபஸ் பெறப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் அண்மைக் காலமாக அங்கு தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றது.

இதுவரை சுமார் 17 மாகாணங்களைத் தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் குறுகிய காலத்தில் ஏராளமான ஆப்கான் இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டும் உள்ளனர். இந்நிலையில் ஆப்கான் துருப்புக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா மீண்டும் விமானப் படைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான தாக்குதல் அதிநவீன டிரோன் விமானத் தாக்குதல்களாகவும் அமைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் 5 தலிபான்கள் கொல்லப் பட்டதாகவும், ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதவிர கடந்த 24 மணித்தியாலத்தில் காஷி அபாட் மாவட்டத்தில் தலிபான்களின் மறைவிடங்களில் ஆப்கான் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் குறைந்தது 20 தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாக வெள்ளிக்கிழமை ஆப்கான் இராணுவம் தெரிவித்துள்ளது. சமீபத்திய நிலவரப்படி மத்திய ஆப்கானில் உள்ள 419 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1/2 பங்கை தலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

மறுபுறம் AP ஊடகத்துக்கு தலிபான்களின் பேச்சாளர் சுஹாயில் ஷஹீன் அண்மையில் அளித்த பேட்டியில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதுக்குமான ஏகபோக உரிமையை நாடவில்லை என்றும், ஆனால் காபூலில் புதிய ஒருங்கிணைந்த அரசு அமையா விட்டாலும், அதிபர் அஷ்ரப் கனி பதவியில் இருந்து நீக்கப் படா விட்டாலும் அங்கு அமைதிக்கு வாய்ப்பில்லை என்றுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஜெனெரல் மார்க் மில்லேய் பெண்டகன் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசும் போது ஆப்கானில் தலிபான்கள் இன்னமும் வலுவான நிலையிலேயே இருப்பதாகவும், ஆனால் இது தவிர்க்க முடியாத ஒரு நிலை அல்ல என்றும் இன்னும் இறுதித் தீர்வு வரையப் படவில்லை என்றே தான் கருதுவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction