ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐ.நா நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க படை; 20 வருட போரை முடித்துக்கொண்டு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை அடுத்து அந்நாட்டு மக்களும் வெளியேற முயற்சித்துவருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே போரினால் ஆப்கானிஸ்தானில் குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. தற்போது இந்நிலை மோசமாகியுள்ளதால் ஆப்கானிஸ்தானில் இவ்வாறு பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்ட ஐ.நா. திட்டமிட்டுள்ளது.
இதன் தொடர்பாக ஐ.நா சபை தலைவர் அன்டோனியோ கட்டரெஸ் உலக நாடுகளிடையே ஓர் முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளார் எனவும் டென்மார்க், கஜகஸ்தான், வடக்கு மாசிடோனியா, பாகிஸ்தான், போலாந்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட நாட்டு பிரதிநிதிகளுடன் இக்கூட்டம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.