free website hit counter

இந்தியர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய இங்கிலாந்து

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்தியுள்ளது.

அக்டோபர் 11 முதல், இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் தனிமைப்படுத்தலை ஏற்கவோ அல்லது கோவிட் சோதனை எடுக்கவோ தேவையில்லை.

வேலை, படிப்பு மற்றும் ஓய்வுக்காக இங்கிலாந்து செல்லும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு நிவாரணமாக கருதப்படுகிறது.

கோவிஷீல்ட் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே சில காலமாக பிரச்சனைகள் உருவாகி வந்தன.

கோவிஷீல்டை அங்கீகரிக்க இங்கிலாந்து முன்பு மறுத்துவிட்டது. எனவே, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இந்திய பயணிகள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கோவிட் -19 சோதனைகளை எடுக்க வேண்டிய சூழல் இருந்துவந்தது.

இந்நிலையில் பலரும் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு காட்டிவந்தனர். இதனையடுத்து இங்கிலாந்து கடந்த மாதம் கோவிஷீல்டை அங்கீகரிக்கப்பட்ட ஜபாக அறிவித்தது. ஆனால் இந்தியாவிலிருந்து வருவோருக்கான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. இதேபோல் பல நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இங்கிலாந்தில் அதே கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவில்லை.

இதனால் கடந்த வாரம் இந்தியாவிற்கு பயணம் செய்யும் பிரிட்டிஷ் நாட்டவர்களுக்கும் இதே கட்டுப்பாடுகளை இந்தியா விதித்திருந்தது. இதனையடுத்து தற்போது இந்தியாவில் கோவிட் தொற்றுப்பரவல் குறைவடைந்து வருவதால் பிரிட்டனின் இந்தியர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction