அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது சரியான மற்றும் சிறந்த முடிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டு காலப்போராக ஆப்கானிஸ்தான் அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக கடந்த 15ஆம் திகதி முறைப்படி அமெரிக்கா அறிவித்தது. இதந்தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாய் வெளியேறியது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் ஆப்கானிஸ்தான் போரை நீட்டிக்க தான் தயாராக இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய முடிவுக்கு நான் பொறுப்பேற்கிறேன் என்றும் இதனை முன்கூட்டியே செய்திருந்தால் உள்நாட்டு போருக்கு வழிவகுத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எனினும் இந்த போர் முடிவுக்கான வெளியேற்றத்தை சவால்கள், அச்சுறுத்தல்கள் இல்லாமால் செய்வது சாத்தியமற்றது எனவும் கூறியுள்ளார்.
மேலும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு, அமெரிக்கா ஒருபோதும் அடிபணியாது என்பதை நான் தெளிவாக கூறுவதாகவும் அமெரிக்காவிற்கோ அல்லது நட்பு நாடுகளுக்கு எதிராக ஈடுபடுவோரை வேட்டையாடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.