free website hit counter

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே முறுகல் அதிகரிப்பு!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள தீவு நாடான தைவான் மீதான சீனாவும் ஆதிக்கம் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே அண்மைக் காலமாக யுத்த அறைகூவலுக்கு ஒப்பான கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை வெளியிட்டு வருகின்றன.

இதனால் இப்பிராந்தியத்திலும், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயும் பதற்றம் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் இவ்விவகாரம் தொடர்பில் அமெரிக்க அதிபர் பைடென் கருத்துத் தெரிவிக்கும் போது, 'தைவானுடனான எமது உறவில் எந்த மாற்றமும் இல்லை. நாம் பொறுப்பாக உள்ளோம். சீனா தைவானைத் தாக்கினால் நாம் நிச்சயம் தைவானைப் பாதுகாப்போம்.' என்று அழுத்தமாகக் கூறியிருந்தார். இக்கூற்று சீனாவின் கோபத்தை அதிகரித்துள்ளது. உடனே சீனா வெளியிட்ட பதிலடியில், 'தைவான் சீனாவின் பிரிக்க முடியாத அம்சம். சீனா அதில் சமரசம் செய்து கொள்ளாது.' என்று தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை ஐ.நா சபைக் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அந்தோனி பிளிங்கென் உரையாற்றுகையில், தைவான் மீது சீனா முறையற்ற விதத்தில் கொண்டாடும் உரிமைக்கு எதிராக ஐ.நாவில் உள்ள பிற நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் சர்வதேச அளவில் போக்குவரத்து, சுகாதாரம், பருவ நிலை மாற்றம், கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் சர்வதேச நிறுவனங்களுடன் சுதந்திரமாக பங்குபெற தைவான் அரசுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுமார் 24 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தைவான் அரசானது, ஐ.நா பொறிமுறையில் பங்கு வகிப்பது என்பது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல, பதிலாக நடைமுறைக்கு ஏற்ற அர்த்தமுள்ள ஒன்று என்றும் பிளிங்கென் தெரிவித்துள்ளார். உலகில் விமானப் போக்குவரத்தில் முக்கிய கேந்திர நிலையமாக தைவான் இருந்த போதும், இதுவரை சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்க தைவானுக்கு தடை விதிக்கப் பட்டு வந்ததையும் பிளிங்கென் சுட்டிக் காட்டினார்.

திபேத், ஹொங் கொங், சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதி, தென் சீனக் கடல் மற்றும் தைவான் போன்ற இடங்களில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் பைடென் ஆகிய இருவருமே தமது எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. 1949 ஆமாண்டு சிவில் யுத்தத்துடன் சீனாவும், தைவானும் பிரிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction