free website hit counter

ஆப்கான் பெண்கள் விரைவில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திரும்ப அனுமதி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மிக குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம், பெண்கள் விரைவில் மேல்நிலைப் பள்ளிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளது. இதன் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, "பாதுகாப்பான கற்றல் சூழலை" உருவாக்கும் வரை மேல்நிலை வகுப்பு பெண்களை வீட்டிலேயே இருக்கும்படி கூறப்பட்டனர். ஆனால் அனைத்து வகுப்புகளிலும் உள்ள சிறுவர்கள் மற்றும் ஆரம்ப வயதுடைய பெண்கள் பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மிகக் குறுகிய காலத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் எனவும் அனைத்துப் பெண்களும் பள்ளி மற்றும் அவர்களின் கற்பித்தல் வேலைகளுக்குத் திரும்புவார்கள்; என தெரிவிக்கப்பட்டுள்ளது,

தலிபான்கள் ஆகஸ்ட் மாதம் முதல் ஆட்சியைப் கைப்பற்றிய ​​ஆயுதக் குழு பெண்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தது. ஆனால் அதன் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தை கவலையடையச் செய்திருந்தது குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction