free website hit counter

பேர்ல் துறைமுகத் தாக்குதலின் 80 ஆவது நினைவை அனுட்டிக்கும் அமெரிக்கா!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2 ஆம் உலகப் போரின் போது முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப் படுவது அமெரிக்காவின் பிரபல பேர்ல் துறைமுகம் (Pearl Harbor) மீதான ஜப்பானிய விமானங்களின் குண்டுத் தாக்குதலாகும்.

இதனால் ஏற்பட்ட இழப்புக்கு பழி வாங்கவும், ஜப்பானின் ஆதிக்கத்தை நிலைகுலையச் செய்யவும் எதிர்வினையாக அமெரிக்கா இரு அணுகுண்டுகளை ஜப்பானில் போட்டதுடன் ஜப்பான் சரணடைய நேரிட்டதும், 2 ஆம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிந்த விடயமாகும். அமெரிக்காவின் ஹாவாய் தீவிலுள்ள பேர்ல் ஹார்பர் மீதான ஜப்பானின் விமானத் தாக்குதல் இடம்பெற்ற 80 ஆவது ஆண்டு நினைவு தினத்தை இன்று டிசம்பர் 7 ஆம் திகதி அமெரிக்கா அனுட்டிக்கின்றது.

1941 ஆமாண்டு இதே தினம் ஜப்பான் இத்தாக்குதலை நடத்திய போது தான் ஐரோப்பா மீது முழுக் கவனம் செலுத்தி இருந்த அமெரிக்கா, ஆசியாவில் அதுவும் ஜப்பானில் இருந்து வந்த அச்சுறுத்தலை உணர்ந்தது. பேர்ல் ஹார்பர் மீதான ஜப்பானின் தாக்குதலின் போது சுமார் 2390 அமெரிக்கர்கள் கொல்லப் பட்டதுடன் அடுத்த நாளே ஜப்பான் மீது அமெரிக்கா போர் பிரகடனம் செய்தது. இந்நிலையில் இத்தாக்குதல் நடத்தப் பட்ட போது கொல்லப் பட்டவர்களுக்கு நினைவு அஞ்சலி செய்யும் நிகழ்வு தேசிய பார்க் சேவையாலும், அமெரிக்க கடற்படையாலும் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.

தாக்குதலின் போது முதலில் மூழ்கடிக்கப் பட்ட Utah என்ற கப்பலில் இருந்த 58 வீரர்களும் 12 நிமிடங்களில் உயிரிழந்தனர். திங்கட்கிழமை மாலை ஹவாயில் அமைந்திருக்கும் பேர்ல் ஹார்பரில் இந்த Utah கப்பல் மூழ்கடிக்கப் பட்ட போது உயிரிழந்தவர்களுக்கான மரியாதை அளிக்கப் பட்டது.

1945 ஆமாண்டு அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்களில் போட்ட அணுகுண்டுகளால் இலட்சக் கணக்கான மக்கள் ஒரே நாளில் உயிரிழந்ததுடன் ஜப்பான் உடனடியாக நிபந்தனை இன்றி சரணடைந்தது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction