தமிழக அரசால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கை அரசிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கையளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்திருந்தார்.
தமிழக அரசால் இலங்கைக்கு வழங்கப்படும் 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய உதவித் திட்டத்தின் முதற்தொகுதியாக இந்தப் பொருள் தொகுதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு அரசால் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.