free website hit counter

இலங்கையின் முதன்மை துறைமுகம் மீளெழுச்சி பெறும் - அமைச்சர் உறுதி!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையின் வரலாற்றுத்துவம் பெற்றதும், வடபகுதி கடற்றொழிலாளர்களின்
பொருளாதார முக்கியத்துவம் மிக்கதாகவும் மிளிர்ந்த மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் உருவாக்கி தரப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் இராஜாங்க அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. 

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புனரமைப்பு பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் முதன்மையான துறைமுகமான இந்த துறைமுகம் இலங்கையின் மீன்பிடித் துறையில் மூன்றில் ஒரு பங்கை வகித்திருந்தது. ஆனாலும் கடந்த காலத்தில் நாட்டில் நடைபெற்ற வன்முறை அழிவு யுத்தம் காரணமாக துரதிஸ்டவசமாக அதில் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிட்டது.
ஆனாலும் அந்த பாதிப்பிலிருந்து இந்த துறைமுகத்தை தூக்கி நிறுத்தும் முகமாகவே அதன் அபிவிருத்திக்கான இரண்டாம் கட்டட பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் எம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் விசேடமாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

அந்தவகையில் எமது மக்கள் குறிப்பாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதுடன் இந்த வரலாற்று மிக்க துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் பொருளாதார ஈட்டலுக்கான வழங்களுடன் செயற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ளார். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction