free website hit counter

2021 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசால
ை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் பெறாத பரீட்சார்த்திகள் எவரேனும் இருப்பின், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்குச் சென்று, சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் அனுமதி அட்டையின் நகலை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் அனுமதி அட்டையின் பெயர், பாடம் மற்றும் மொழி ஆகியவற்றை திருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தர 2021 பரீட்சை 2022 பெப்ரவரி 07 முதல் மார்ச் 05 வரை நாடளாவிய ரீதியில் 2,439 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction