மதிப்பிடப்பட்ட தொகைக்கும் வாங்கிய தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம் சுமார் 3000 சதவீதம்.
விலங்குகளை வாங்கும் போது துல்லியமான மதிப்பீடுகளைத் தயாரிப்பது அவசியம் என்று தேசிய விலங்கியல் துறைத் தலைவர்களுக்கு கோபா கமிட்டி பரிந்துரைத்திருந்தது. இதற்கிடையில், மதிப்பிடப்பட்ட தொகைக்கும் வாங்கிய தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம் சுமார் 3000 சதவீதம் என்று (கோபா குழு) குழு குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு பறவைகளை (2018 முதல் 2020 வரை) வாங்கும் போது, சில பறவைகளுக்கு சுமார் 50000 ரூபாய் மதிப்பிடப்பட்டாலும், அவை 15 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாக அரசு கணக்கு குழுவில் தெரியவந்துள்ளது.
இதன்மூலம், மதிப்பிடப்பட்ட தொகையை விட சுமார் 3000 சதவீதம் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது வெளிவந்துள்ளது.
பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல வாகொல்ல மிருகக்காட்சிசாலை மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றின் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
ரிதியகம சபாரி பூங்காவில் உள்ள 900 விலங்குகளில் 485 விலங்குகள் ஆணா, பெண்ணா என அடையாளம் காணப்படவில்லை.
இதில் 300க்கும் மேற்பட்ட விலங்குகள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் என்றும், அவை தொடர்பான நீதிமன்ற வழக்குகள் நிறைவடையும் வரை மிருகக்காட்சிசாலை பொறுப்பில் இருப்பதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சபாரி பூங்காவில் ஒரு கால்நடை மருத்துவர் மட்டுமே உள்ளதால், காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என கோபா குழு தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும், இந்த நிறுவனத்திடம் முறையான மூலோபாயத் திட்டம் இல்லாததால், 2024-2030 ஆம் ஆண்டுக்கான புதிய திட்டத்தைத் தயாரித்து. இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறும் கோபா குழு தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் குழுவின் அனுமதியுடன் கலந்து கொண்டிருந்தார்.
இதுதவிர இராஜாங்க அமைச்சர்களான டயானா கமகே, சாமர சம்பத் தசநாயக்க, காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக் அபேசிங்க, விமலவீர திஸாநாயக்க, நிரோஷன் பெரேரா, ஜே.சி அலவத்துவல, ஹெக்டர் அப்புஹாமி, ஜயந்த கெடகொட, இசுரு தொடங்கொட, மேஜர், பிரதீப் உடுகொடஇ ஹரிணி, வீரசுமண வீரசிங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.