free website hit counter

திருத்தங்கள் மேற்கொண்டு துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தை வழங்க தீர்மானம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஒரு வருடத்துக்குள் வன விலங்குகளால் பாரியளவில் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாய பயிர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பயிர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை பாவிப்பது தொடர்பில் முன்னர் காணப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்காக கொண்டிருக்கவேண்டிய பயிர்ச்செய்கை நிலப்பரப்பின் அளவை 5 ஏக்கர் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

ஒரு வருடத்துக்குள் வன விலங்குகளால் பாரியளவில் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காலத்துக்கு ஏற்றதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் முற்போக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் நுகர்வுக்குத் தேவையான பொருட்களை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும், நாட்டின் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் விவசாயிகளுக்கு பலமான கரங்களை வழங்குவதற்கான பின்னணியை உருவாக்குவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு துப்பாக்கிப் பாவனை தொடர்பிலான மேலதிக விபரங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction