இலங்கையில் இன்று 60 வகையான மருந்துகளின் விலைகளை 40 சதவீதத்தால் உயர்த்தப்பட்டு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருந்தை விற்பனை செய்யும் உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளர் திருத்தப்பட்ட சில்லறை விலையை விகிதாசாரப்படி 40% அதிகரிக்க முடியும் என சுகாதர அமைச்சரால் இவ் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 500 மில்லிகிராம் அளவுள்ள பாராசிட்டமால் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 4.16 ஆகவும் அமோக்ஸிசிலின் 375 mg மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.83.71 ஆக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
																						
     
     
    