டென்னிஸ் விளையாட்டில் உலகின் முன்னனி வீரரான ஜோகோவிச் கொரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து தான் மிகவும் வருத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் செர்பியா மற்றும் குரோஷியா நாடுகளின் இரண்டு நகரங்களில் அட்ரியா டூர் என்ற பெயரில் நலநிதி கண்காட்சி டென்னிஸ் போட்டி ஒன்றை உலக டென்னிஸ் சாம்பியன் நோவக் ஜோகோவிச் நடத்தினார். இதில் பங்கேற்ற சிலவீரர்களுக்கு பரிசோதனையின் போது கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தபின் இறுதி ஆட்டம் ரத்தானது.
மிக ஆர்வாமாக முன்னின்று போட்டிகளை நடாத்திய நோவக் ஜோகோவிச்சுக்கும் அவரது மனைவிற்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையின்போது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்ட நோவக் ஜோகோவிச் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காக மிகவும் வருந்துகிறேன்; எனது மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர்கள் வெகுவிரைவில் குணமடைந்து நோயிலிருந்து மீள்வார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக 33 வயதான உலக சாதனை படைத்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் போட்டி தொடர் ஒன்றிற்கு செல்லும் முன் கொரோனா தடுப்பூசி போடும் நிலை வந்தாலும் அதை பயன்படுத்தமாட்டேன் என எதிர்ப்பு கூறியிருந்தது குறிப்பிடதக்கது.