செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் 2021 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிடம் கேப்டன்சியை ஒப்படைக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு செய்துள்ளது.
வழக்கமான கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் காரணமாக 2021 ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரிஷப் பன்ட்டிற்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, ஐயர் தலைமையில் முதல் முறையாக டெல்லி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு வந்தத என்பதும் குறிப்பிடத்தக்கது.
																						
     
     
    