free website hit counter

தேசிய விளையாட்டுத்துறை விருதுகள் 2020 : ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிரிக்கெட்டவீரர் ரோகித் சர்மா, தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்டோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசு சார்பில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு வருடந்தோரும் ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

2020 ஆம் ஆண்டிற்கான விருது பட்டியலில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவிற்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ர, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கும் இவ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக உயரிய ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை ஒரே ஆண்டில் 5 பேர் பெற்றுக்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்த சாக்‌ஷி மாலிக், மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது, மற்றபடி மத்திய அரசின் தேர்வுக்குழு சார்பில் ஒப்படைக்கப்பட்ட விளையாட்டு விருதுப்பட்டியல் மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வருகிற 29 ஆம் திகதி ஆன்லைன் வழி தேசிய விருது வழங்கும் விழா நடைபெறவிருப்பது குறிப்பிடதக்க்து.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction