free website hit counter

ஆசிய கோப்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
சார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர்-4 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் துவக்க ஜோடி 36 ரன்களில் பிரிந்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜத்ரன் 35 ரன்கள் சேர்த்தார். கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் விளாசினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராப் 2 விக்கெட்டும், நசீம் ஷா, ஹஸ்னைன், முகமது நவாஸ், சதாப் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர்.

பாபர் அசாம் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆனார். அடுத்துவந்த பகர் சமான் 5 ரன்களுடன் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய ரிஸ்வான் 20 ரன்னில் வெளியேறினார்.

பின்னர், களமிறங்கிய இப்தார் அகமது, ஷதாப் கான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்தார் கான் 30 ரன்னிலும், ஷதாப் கான் 36 ரன்னிலும் வெளியேறினர்.

பின்னர் வந்த பாகிஸ்தான் வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா, கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சருக்கு பறக்கவிட்டார்.
இதன் மூலம் 19.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 131 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது. பாகிஸ்தான் தகுதிபெற்றதை தொடர்ந்து இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன் மூலம் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான், இந்தியா அணிகள் இழந்தன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction