அதுதான் பெண்களுக்கான இடம் கொடுத்துவிட்டோமோ ! என சொல்பவர்களுக்கு, லிலி சிங் சொல்லும் பதில் இந்தக் கானொளியில் இருக்கிறது.
ஆனால் இந்தக் காணொளிக்கும், மகளீர் தினத்திற்கும் தொடர்பில்லை. Ted show இல் இந்த காணொளி வெளியானது கடந்த வருடம் டிசம்பர் மாதம். ஆனால் இன்றைய மகளீர் தினத்தில் அனைத்து ஆண்களுடனும் இதனை பகிர்ந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன்.
Lilly Singh பற்றி சிலவேளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நடிகை, தயாரிப்பாளர், எழுத்தாளர், கிரியேட்டர், யூடியூப்பர் என பன்முகம் கொண்ட இந்தியப் பெண்.
அமெரிக்க பிரபல தொலைக்காட்சியொன்றில் Late-Night talk show இன் ஒரு அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து, உலகளவில் இன்னமும் பிரபலமானவர். ஆனால் பிரபலமான பின்னரும், பல ஆண்களுக்கு சமமாக நாற்காலி போட்டு உட்கார வைக்கப்பட்ட பின்னரும், தான் ஒரு பெண் என்பதற்காக காண்பிக்கப்படும் பாகுபாடுகள் பற்றியும், அந்தஸ்து கொடுத்துவிட்டும். நன்றிக்கடனாக நீ அமைதியாக இருந்துகொள் என போதிக்கும் ஆணாதிக்க ஆலோசனைகள் பற்றியும், இந்த காணொளியில் பேசுகிறார்.
மொத்தத்தில், ஆண்களுக்கு நிகராக ஒரு மேஜையின் கீழ் நாற்காலிகளில் ஒன்றை பிடித்துக் கொள்வதன் மூலமோ, அல்லது பெண்ணுக்கு ஒரு நாற்காலி போடுவதன் மூலமோ, ஆண், பெண் பாரபட்சத்தை நிவர்த்தி செய்ய முடியாது. நாற்காலி மட்டுமல்ல பிரச்சினை. அதற்காக போடப்படும் மேசையை முதலில் மாற்றவேண்டும் என்கிறார்.
19 நிமிடம் கொண்ட இந்த காணொளியை நேரமிருந்தால் முழுதாக ஒரு முறை அவதானித்து பாருங்கள், கேளுங்கள். துரதிஸ்டவசமாக இந்த காணொளி ஆங்கிலத்தில் மாத்திரமே இருக்கிறது. இன்னமும் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படவில்லை. ஆயினும் உங்களிடம் ஆங்கில ஆளுமை இருந்தால் நிச்சயம் பார்க்கவும், பகிரவும் கூடிய காணொளி. குறிப்பாக இன்றைய நளில் அனைத்து பெண்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி அடுத்த வேலையை பார்க்காமல், ஒரு ஆணாக, பெண்ணின் சமவுரியைமை உறுதிப்படுத்திக் கொள்ளவும், அதனை பாதுகாக்கவும் உங்களால் ஆன ஒரு சிறு முயற்சியை நீங்கள் செய்யலாமே.
அன்பு பெருக, சரிவுகள் உயர, தெரிவுகள் நிலைக்க பெண்களின் சமவுரியை நிலையுறுத்தும் அனைவருக்கும் மகளீர் தின வாழ்த்துக்களுக்கும் நன்றிகளும்.
-4தமிழ்மீடியாவுக்காக: ஸாரா