ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளை ரசிகர்கள் ஜன.6 இன்று கொண்டாடிவருகின்றனர்.
அசத்தல் கொம்போவாக இப்போது மீண்டும் நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து அவரது மூன் வாக் திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது குறித்து வெளியான காணொளி இணையத்தில் பரபரப்பாகியிருந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரமாண்டமான மூன் வாக் இசை வெளியீட்டு விழாவில் 10,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நிறைந்த கூட்டத்தின் முன்னிலையில் ஆர். ரஹ்மானின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மேடையில் அவரை ஆச்சரியப்படுத்தியதால், இரட்டை கொண்டாட்டமாக மாறியது.
மெட்ராஸின் மொஸார்ட் என்று அன்பாக அழைக்கப்படும் ரஹ்மான், மூன் வாக்கில் ஐந்து பாடல்களையும் அவரே பாடியுள்ளதும் சிறப்புறச் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
