free website hit counter

நற்குஞ்சர நலம் தரும் விநாயகன் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விநாயக வழிபாடு எளிதானதும், எல்லா மக்களாலும், அனுஷ்டிக்கப்படும் இலகு வழிபாடு.  கார்த்திகை மாத கார்திகையின் பின்னதாக அபரபக்‌ஷ பிரதமையில் ஆரம்பமாகி, மார்கழி மாத பூர்வபக்ஷ சஷ்டித் திதி வரையிலான 21 திதிகள் விநாயகர் விரதகாலமாகும்.

“நற் குஞ்ரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண்.” உமாபதி சிவாச்சாரியாரின் “திருவருட்பயன்” என்ற நூலின் காப்புச் செய்யுள்ளில் வரும் வாசகங்கள் இவை.  இதன் பொருட்டு விநாயகரை வழிபட்டு வர கலைஞானங்கள் வளரும் என்றுணர்ந்து விநாயகரைப் போற்றித் துதிததனர் நம் முன்னோர்.
 
பிள்ளையார் பிரணவப்பொருள் வடிவினன் என்று சொல்லப்படுகிறது. அதேவேளை அருஉருவத் திருமேனியாக மஞ்சளிலும், பசுஞ்சாணகத்திலும் வழிபடும் அடியவர்க்கும் அருள்பவன். வட இந்தியாவிலும், முக்தித்தலமான காசியின் பிரகாரங்கள் பலவற்றிலும் இத்தகைய அருவருவத் திமேனிகளாய் அமைந்த விநாயகர் வடிவங்களைக் காணலாம். நம்பிக்கையின் வலுவான தோற்றத்தினை வலியுறுத்துபவை இத்தகைய அருவுருவத் திருமேனிகள். இதேபோன்ற அருவுருவத் திருமேனிகளிலான விநாயக வழிபாடு ஈழத்திலும் பல பகுதிகளில் இடம்பெற்றிருந்தன. அவற்றில் இப்போது பலவும் உருவத் திருமேனிகளாக மாற்றம் கண்டுள்ளன.

"ஒரு யானை எலியின் மீது சவாரி செய்வது பொருள் உலகில் சாத்தியமற்றது,  விநாயகர், அவரது பக்தர்களைப் போல், இயற்பியல் விதிகளால் கட்டுப்படுத்தப் படவில்லை. இந்த அற்புதமான தாந்த்ரீக தரிசனத்தில், சிம்மாசனத்தில் அமர்ந்த கடவுள் தனது ஐந்து தலை மற்றும் பத்து ஆயுதங்களுடன் கூடிய  வடிவில், அவரது மனைவி முழங்காலில் காணப்படுகிறார். சிற்பத்தின் அடிப்பகுதியில் அவர் சவாரி செய்யும் எலி உள்ளது. புதிய முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் தடைகளை நீக்க  வழிபடப்படும், யானை தலை தெய்வமான விநாயகர் மங்களகரமான அனைத்தின் உருவகமாகவும், இன்றுவரை தெற்காசியா முழுவதும் பிரபலமான தெய்வமாகவும் இருக்கிறார். " என பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள இந்தப் பஞ்சமுக விநாயகர் சிற்பம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ( இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒடிசாவில் 1200 - 1300 இருந்த இச் சிற்பம், 1872 காலப் பகுதியில் பிரித்தானியாவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.)

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula