" உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரார்த்தனை மூலம் நெருக்கமாக இருக்கின்றேன். நம்பிக்கையின் உறுதியும், தர்மத்தின் ஆர்வமும் கொண்டு இந்த கடினமான தருணத்தை வாழ, விசுவாசிகளை ஊக்குவிப்பதில் நான் எனது சகோதரர் ஆயர்களுடன் சேர்கிறேன் " என, வத்திகானில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி பிரார்த்தனை பிரசங்கத்தின் போது புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார்.
வத்திகானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்கள் முன் நேரடியாகத் தோன்றாது, பிரம்மாண்டமான திரைகளின் வழி, அவரது பிரார்த்தனை வழிபாடுகள் ஒளிபரப்புச் செய்யபட்டது. இத்தாலியின் கொரோனா வைரஸ் நாவலின் கொடிய பரவலால், வத்திகானில் பல நூற்றாண்டுகளின் பாரம்பரியமான பாப்பரசரின் ஞாயிறு பிரார்த்தனையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
83 வயதான போப் சளி நோயால் பாதிக்கப்பட்ட தன் காரணமாக, COVID-19 க்கு எதிர்மறையை சோதித்தவர். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த சிறிய தொகை மக்கள் கூட்டத்திற்கு ஆசிர்வதிக்கும் பொருட்டு, வத்திக்கான் பலாஸ்ஸோ ஜன்னலில் சில நொடிகள் தோன்றினார். ஆனால் அவர் சாளரத்திலிருந்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மாறாக அவரது பாரம்பரிய ஏஞ்சலஸ் பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாதங்களுடன் முதன்முறையாக சதுக்கத்தில் பெரிய திரைகளில் , வத்திக்கானின் அப்போஸ்தலிக்க நூலகத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்தவர்கள் சனிக்கிழமை வரையில் 233 ஆக இருந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 366 ஆக உயர்ந்ததுள்ளது எனவும், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,492 ஆக உயர்ந்து, மொத்தம் 7,375 ஐ எட்டியுள்ளது என்றும் இத்தாலியின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.