free website hit counter

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அப்படியே இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில், இலங்கையர்களுக்கு வளமான நாடு மற்றும் அனைவருக்கும் நிறைவான வாழ்வு என்ற நம்பிக்கையை உணர வேண்டுமானால், கலாசார, அரசியல் மற்றும் மனோபாவ மாற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஒக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி விடுமுறையை முன்னிட்டு தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளும் நவம்பர் 01ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் நவம்பர் 01 ஆம் திகதி பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்படாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

இலங்கையின் திறந்த சந்தை நடவடிக்கைகளின் ஊடாக CBSL ரூபாய் 1 பில்லியன் பெறுமதியான நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளதாக அண்மையில் வெளியான செய்திகள் ‘முற்றிலும் அடிப்படையற்றவை’ என இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று நிராகரித்துள்ளது.

ஆட்சிக்கு வந்த பின்னர் பணம் அச்சடித்து புதிய கடன்களை பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …