பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களுக்குப் புதுப்பித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள வாகன சாரதிகளுக்கு இந்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முழுமையாக ஆதரவளித்த போதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சியை பிளவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.