கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் இதுவரை கொரோனா தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை செப்.6 முதல் கொழும்பு 1 முதல் 15-இற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு மாநகர சபை சீன தயாரிப்பான Sinopharm தடுப்பூசிகளை இவர்களுக்காக பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி செலுத்தும் பணி கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட 6 இடங்களில் முன்னெடுக்கபடவுள்ளது. அதற்கமைய நாளை கொழும்பு – சுகததாச விளையாட்டரங்கு, ஜிந்துப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், போர்ப்ஸ் வீதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபம், கெம்பல் பூங்கா, நாரஹென்பிட்டி ஷாலிகா மண்டபம் மற்றும் வௌ்ளவத்தை ரொக்ஸி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.