free website hit counter

தாய்லாந்து பௌத்த தேரர்களின் பாத யாத்திரை திருமலையில் இருந்து ஆரம்பம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தாய்லாந்து பௌத்த தேரர்களின் பாத யாத்திரை ஆரம்பம்.
திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய தாய்லாந்து பௌத்த பிக்குகளின் பாத யாத்திரை (உபசம்பதா) ஆரம்ப நிகழ்வானது இன்று திங்கட்கிழமை (15) ஆரம்பமானது. இதில் 50 க்கும் மேற்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் பங்கேற்றனர்.

திருகோணமலை கண்டி பிரதான வீதி ஊடாக பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் விருந்துபசாரம் வழங்கி உற்சாக வரவேற்பளித்தனர்.

இதன்போது தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடாகவும் அவர்கள் வரவேற்பளிக்கப்பட்டனர். தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருட பூர்த்தியை முன்னிட்டு இந் நிகழ்வு இடம் பெற்று வருகினறது.

திருகோணமலையில் இருந்து பிரதான வீதி ஊடாக கண்டியை நோக்கி இப் பாத யாத்திரை 10 நாட்களுக்குள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction