மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு விடையிறுக்கும் வகையில் எண்ணெய் விலையில் சாத்தியமான அதிகரிப்புகளை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் அதிகரித்து வரும் எண்ணெய் விலையின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் ஒரு செயற்பாட்டு அணுகுமுறையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சமர்ப்பித்த அவதானிப்பு அறிக்கையின் அடிப்படையில் தற்போது குழு பரிந்துரைகளை மீளாய்வு செய்து வருவதாக அவர் விளக்கினார்.
"மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலையால், எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இது தொடர்பான அவதானிப்பு அறிக்கையை ஏற்கனவே வழங்கியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்தக் குழு, அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் எண்ணெய் விலைகளை [இலங்கையில்] கட்டுப்படுத்துவதற்கு தீவிரமாகத் தலையிட்டு உத்திகளை உருவாக்கும்” என்று அமைச்சர் ஹேரத் கூறினார்.