இலங்கையில் தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மதிப்பளிப்பதாக தெரியவில்லையென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், . நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஏற்றுபட்டுள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் அவரே பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளாரெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, இன்று அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
1.தினேஸ் குணவர்தன - அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
2.டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில்
3.ரமேஷ் பத்திரண- கல்வி, பெருந்தோட்டம்
4.பிரசன்ன ரணதுங்க - பாதுகாப்பு, சுற்றுலா
5.திலும் அமுனுகம- கைத்தொழில், போக்குவரத்து
6.கனக ஹேரத்- பெருந்தெருக்கள்
7.விதுர விக்ரமநாயக்க - தொழில்
8.ஜனக வக்கும்புர - விவசாயம், நீர்பாசனம்
9.செஹான் சேமசிங்க - வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி
10.மொஹான் பிரியதர்ஷன யாபா - நீர் வழங்கல்
11.விமலவீர திசாநாயக்க - வனசீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி
12.காஞ்சன விஜேசேகர - எரிசக்தி, மின்வலு
13.தேனுக விதானகமகே - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
14.நாலக கொடஹேவ - ஊடகம்
15.சன்ன ஜயசுமன - சுகாதாரம்
16.நசீர் அஹமட் - சுற்றாடல்
17. பிரமித பண்டார தென்னகோன் - துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை
இதேவேளை இன்று விடுமுறைநாட்களின் பின்னதாகத் திறக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி, 340 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.