இன்று அதிகாலை முதல் அமல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பூரணை தினம் என்பதால் பொது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் இன்றைய தினம் பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்பாக கொரோனா தடுப்பு செயலணி ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு இன்று நடைபெற்றவுள்ளது.
இதேவேளை கொரோனா தனிமைப்படுத்தல் செயல்பாடுகளின் கீழ் நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த்தொற்றுடன் நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 50 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 அதிகரித்துள்ளதுடன்; 2 இலட்சத்து 12 ஆயிரத்து 825 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களாக உள்ளனர்.