சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கைப் பிரதமர் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். இதன்போது சீனாவின் எழுச்சி குறித்து உரையாற்றினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் :
தன்னிறைவு பொருளாதாரத்தை விவசாயத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதன் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட நாடாக சீனா காணப்படுகிறது. மேலும் சீனா என்பது நாடு மட்டுமல்ல அது மாபெரும் நாகரிகம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் யுத்த காலப்பகுதியிலும் அதன் பின்னரும் சீன அரசாங்கம் இலங்கையின் சுதந்திரத்திற்காக பெரிதும் உதவியுள்ளதாகவும் இலங்கையின் சுயாதீனத்தை பாதுகாக்க சீனா கைகொடுத்தமையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவை உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இடம்பெறும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    