பல்வேறு தரப்பினரால் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில் கடந்த 8 மாதங்களாக எரிவாயு விலை தொடர்பில் பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றுவருகிறது. நுகர்வோர் அதிகார சபையினால் பல்வேறு தடவைகள் இதன் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே எரிவாயு விற்பனையாளர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் நிலைமை தொடர்பில் தீர்வு ஒன்றினை எடுப்பதற்கு ஆராயப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்ட அவர்; ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் இதன் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு சாதகமான முடிவை பெற்றுத்தருவதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கு இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.