இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் அடுத்த மாதம் முதல் சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
நேற்று கொக்கல சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சந்திப்பு கலந்துரையாடலை ஏற்படுத்தியிருந்தார். இதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கொரோனா தடுப்பூசியை சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் பேசியுள்ளார்.
இது தொடர்ப்பில் அண்மையில் சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
எனவே ஜூலை மாதம் முதல் கொக்கல சுதந்திர வர்த்தக வலயம் உள்ளிட்ட அனைத்து சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.