இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மேலதிகமாக ஒரு ட்ரில்லியன் ரூபாயை உடனடியாக அச்சடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.
அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டு கடன் உதவிகளை எதிர்பார்த்து நிற்பதாகவும், தேசிய தேவையை பூர்த்தி செய்ய மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். புதிதாக பணத்தை அச்சடிக்கும் இந்த செயற்பாடுகள் காரணமாக, தேசிய ரீதியில் வருடாந்த பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, உக்ரைன் யுத்தம் காரணமாக உலகளாவிய ரீதியில் பொருளாதார மந்த நிலையை உருவாகும் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்மை குறிப்பிடத்தக்கது.