இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2-வது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்றிரவு நடைபெற்றது. ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் அடித்தது.
கேப்டன் ஆரன் பிஞ்ச் 31 ரன் அடித்தார். அதிகபட்சமாக மேத்யூ வாட் 43 ரன் குவித்து களத்தில் இருந்தார்.
இந்தியா தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் 91 ரன் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10 ரன்னுக்கு வெளியேறினார். சிறப்பாக விளைடியாக கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். விராத் கோலி 11 ரன்னும், பாண்ட்யா 9 ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ரன் அடித்தார்.
7.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் குவித்த இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற சமன் நிலையில் உள்ளது.
2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா அணி வெற்றி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode