நடிகர் அஜித்குமார் மீண்டும் மோட்டார் கார் பந்தயத்தில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களில் இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஸ்பானியாவின் பார்சிலோனாவில் அடுத்த பந்தயத்திற்கு தயாராகி கொண்டிரும் அவர், அடுத்து வரும் 2025ல் 24H துபாய் மற்றும் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் திட்டத்திலிருப்பதாகத் தெரியவருகிறது.
கடந்த செப்டம்பரில், புதிய திறமையாளர்களுக்கான களமாக, "அஜித் குமார் ரேசிங்" எனும் போட்டி அணியை உருவாக்கிய அஜித், போட்டிகளில் நேரடியாகப் பங்கேற்கவுள்ளதாகவும், அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.