ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ரியான் பர்ல் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ராகுல் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் களமிறங்கிய கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.மறுபுறம்அதிரடியா விளையாடிய தவான் 33 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்துவந்த இஷான் கிஷன் 6 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.தொடர்ந்து கில் 33 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் தீபக் ஹூடா ,சஞ்சு சாம்சன் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். தீபக் ஹூடா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் சாம்சன் அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.