நமது சொந்த ஆயுதங்களை கொண்டு வருங்கால போர்களில் ஈடுபட முடியும் என கடற்படை துணை தளபதி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இதற்கு இந்திய நிறுவனங்கள் தரப்பில் இருந்து சிறந்த முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. வளர்ச்சி, ஆத்மநிர்பாரத் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந்தியா விளங்குகிறது.
வான், நீருக்கு அடியில், தரையின் மேற்பரப்பில் என அனைத்து போர் நிலைகளிலும், போரிடும் முறையில் பெரிய அளவில் நாம் வளர்ந்து இருக்கிறோம். நடுத்தர மற்றும் குறுகிய தொலைவுக்கான ஏவுகணை செலுத்துவது, நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை செலுத்துவது, வானில் இருந்து கப்பலுக்கான ஏவுகணை என கடற்படையில் நாம் வளர்ச்சி கண்டு வருகிறோம்.
வருங்கால போர்களை நமது சொந்த தொழிற்சாலைகளில் உருவான நமது சொந்த ஆயுதங்களை கொண்டு போரிட முடியும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். பிரதமரின் இந்த தொலைநோக்கு பார்வை சாதனை படைக்கும். அதற்கேற்ப இந்த டிபன்ஸ்எக்ஸ்போ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை 2 முதல் 3 ஆண்டுகளில் அடைந்துள்ளோம் என அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.