free website hit counter

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன வளாகத்தில் ரூ. 150 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 42 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதனை தங்களுடைய தொழிற்சாலைகளிலேயே உபயோகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையமாகும்.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்தார்.

இங்கு 25.3 மெகாவாட் (நேர்மின்சாரம்), 22 மெகாவாட் (மாற்றுமின்சாரம்) திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையத்திட்டம், நவீனகால பசுமை, நிலையான தொழில் நுட்பம் மற்றும் தன்னிறைவு பெற்ற ஆற்றல் உற்பத்தியை செயல்படுத்த ஸ்பிக் நிறுவனத்தின் இ.எஸ்.ஜி. உத்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மிதக்கும் சோலார் திட்டங்கள் பாரம்பரிய நில அடிப்படையிலான சோலார் ஆலைகளை விட அதிக உற்பத்தியை வழங்குவதோடு, ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தி, தண்ணீரை ஆவியாகி சேமிக்கிறது. இச்சூரிய மின்சக்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரமும் ஸ்பிக் மற்றும் ‘கிரீன் ஸ்டார்’ உரங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மிதக்கும் சூரியமின் நிலையம், நீர் குளிர்ச்சி விளைவை எளிதாக்கி, அதிக மின் உற்பத்திக்கு உதவுகிறது. சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தவிர, நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் ஆவியாகாமல் 60 சதவீதம் கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் நன்மைக்கும் இத்திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டம் இந்திய சூரிய ஆற்றல் மேம்பாட்டுத் துறையில் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.

மிதக்கும் சூரியமின் நிலையத் திட்டம் புதுப்பிக் கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ள தொழில்களை மேம்படுத்துவதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் இலக்கை அடைவதற்கான ஒரு நடவடிக்கையாக அமையும்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி., தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ராமகிருஷ்ணன், முதன்மை நிதி அலுவலர் ஆனந்தன் மற்றும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction