139 நாட்களுக்குப் பிறகு சென்னையில் ஒரு நபர் கூட கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் -19 தொற்றுக்கு பலியாகவில்லை.
ஞாயிற்றுக்கிழமை 1,02,904 பேருக்கு அரசு தடுப்பூசி போடப்பட்டது.தமிழ்நாட்டிற்கு மொத்தமாக 11.5 கோடி தடுப்பூசிகள் தேவை என்றும் ஆனால் மத்திய அரசு இன்றுவரை 1.6 கோடி தடுப்பூசிகள் தான் வழங்கியுள்ளது என்று சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். மற்றும் சனிக்கிழமை தமிழ்நாட்டிற்கு கிடைத்த 5 லட்சம் தடுப்பூசிகளை அந்த நாளே அனைத்து மாவட்டத்திற்கும் விநியோகிக்கப்பட்டன.
சென்னை மற்றும் அதன் அண்டிய மாவட்டங்கள் 82,500 தடுப்பூசிகள் பெற்றன, மீதமுள்ளவை மற்ற மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. சென்னை மற்றும் அதன் அண்டிய மாவட்டங்களில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. இதே போன்று பிற முக்கிய திருச்சி, மதுரை நகரங்களிலும் நோய்தொற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.