மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
புதிய கல்வி கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common university entrance test) நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த முறை ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 14,90,283 மாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் கலை சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக இந்த தேர்விற்காக விண்ணப்பித்திருந்தனர். அதில் மொத்தமாக 9,68,201 மாணவர்கள் கலந்து கொண்டதாக தேசிய தேர்வு மையத்தின் புள்ளிவிவரத்தில் தெரித்தது. இதில் தமிழ், ஆங்கிலம் உட்பட 13 இந்திய மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், ஏற்கெனவே தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்டபடி இன்று மாலை கியூட் பிஜி தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை https://cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    