தமிழகத்தில் இன்று முதல் இ-பாஸ் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சில தளர்வுகளுடன் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் மாவட்டத்துள் பயணிக்க இன்று திங்கள்கிழமை முதல் இணைய பதிவு முறை கட்டாயமாக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. அதாவது மாவட்டத்துள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இணைய பதிவு எனும் இ-பாஸ் பதிவை மேற்கொள்ள அவசியமாக்கப்பட்டுள்ளது. மூன்று வகை அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ள இந்தப்பதிவுத்திட்டத்தில் சாலைவழி பயணம், ரயில், விமானம் ஆகிய மூன்றுக்கும் தனித்தனியே பதிவுசெய்யவேண்டும். எங்கு போகிறோம் என்றும் தனிநபரா அல்லது குழுவினரா என்பதையும் குறிப்பிட வேண்டும். எனினும் அத்தியாவசிய காரணங்கள் இருந்தால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் ஐந்து வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.