சுவிற்சர்லாந்து முழுவதும் நிலவும் கடுமையான மழைவீழ்ச்சி காரணமாக ஏரிகள் மற்றும் ஆறுகள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சுவிஸ் சுற்றுச்சூழலுக்கான மத்திய கூட்டாட்சி அலுவலகம் எச்சரித்துள்ளது.
தற்போதுள்ள நிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கடந்த இரவில் பெய்த மழை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளின் நீரளவை மேலும் உயர்த்தியுள்ளது.
பீல், சூரிச், அரோ, மற்றும் லுசேர்ன் பகுதிகளில் உள்ள ஏரிகளிலும், ரைன் நதிகளிலும் நீர் வரத்து மிக அதிகமாகவுள்ளது. லூசெர்ன் ஏரியைப் பொறுத்தவரை, ஆபத்து மிக அதிகமாக உள்ளதாகவும், இந்த நிலை பல இடங்களிலும், புதன்கிழமை ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, தூன் மற்றும் பியென் ஏரிகள் அதிகபட்ச எச்சரிக்கை நிலை நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெர்ன் மற்றும் லூசெர்னில், தற்போது பெரியளவில் ஆபத்துக்கள் இல்லையெனினும், இனிவரும் நாட்களில் பெரும் வெள்ளத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தபட்சம் இந்த ஆபத்தினைக் கட்டுப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது. சுற்றுச்சூழல் கூட்டாட்சி அலுவலக அறிக்கையின் படி, வரும் நாட்களில் ஏரிகள் மற்றும் ஆறுகளின் அளவு மீண்டும் உயரும் எனவும், தற்போது மழைவீழ்சிச உள்ள பகுதிகளில் 60 முதல் 80 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் அதிகாரிகள் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன், வாகனங்கள் மற்றும் பொருட்களைப் பாதுகாப்பதுடன், அவசியமற்ற பயணங்களைத் தவிரத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதே எச்சரிக்கை வேண்டுகோளை கூட்டமைப்பின் தலைவர் கை பர்மேலின் நேற்று தனது ட்விட்டர் குறிப்பினூடாகவும் விடுத்திருந்தார்.
Les #intempéries qui ravagent notre pays sont inquiétantes. Les risques d'inondation augmentent. Je remercie infiniment tous ceux qui assurent la sécurité de la population. Restons solidaires et, surtout, soyez prudents !
— Guy Parmelin (@ParmelinG) July 14, 2021